வரவு, செலவு கணக்குகள் ஆய்வு…. ரூ.7.85 லட்சம் மோசடி செய்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் அம்மன் சன்னதி தெருவில் குணசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனங்களின் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக ஏஜென்சியில் மாரியப்பன் என்பவர் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு குணசீலன் வரவு, செலவு கணக்குகளை ஆய்வு செய்த போது மாரியப்பன் 7 லட்சத்து 85 ஆயிரத்து 856 ரூபாயை மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து நெல்லை டவுன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மாரியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.