மக்களே உஷார்….! வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.27 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கத்தில் தனியார் நிறுவன ஊழியரான ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயக்குமார் தனக்கு தெரிந்த சிலரிடம் தனது நண்பர் ரயில்வே துறையில் வேலை பார்த்து வருவதாகவும், பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருகிறேன் எனவும் கூறியுள்ளார். இதனை நம்பி 7 பேர் ஜெயக்குமாரிடம் 27 லட்ச ரூபாயை கொடுத்தனர்.

ஆனால் கூறியபடி ஜெயக்குமார் வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பண மோசடியில் ஈடுபட்ட ஜெயக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply