வாலிபர் கடத்தி சென்றாரா…? மாயமான பள்ளி மாணவி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சித்தலிங்கம் மடம் கிராமத்தில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி தற்போது அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் தங்களது மகளை கிருஷ்ணகிதியைச் சேர்ந்த முருகன் என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply