கோவில் திருவிழா நிறைவு நாள்…. பூசாரிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியகவுண்டனூர் பகுதியில் கருப்பையா(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் இரும்பாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் கருப்பையா அப்பகுதியில் இருக்கும் கருப்பசாமி கோவிலில் பூசாரியாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் கோவில் திருவிழா நிறைவு நாளான நேற்று முன்தினம் அடசல் என்னும் விழா நடைபெற இருந்தது. இதனால் கருப்பையா ஊர் மந்தையில் இருக்கும் கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து கருப்பையா தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதனை பார்த்த வாலிபர்கள் கருப்பையாவை மீட்டு குஜிலியம்பாறையில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர் கருப்பையா ஏற்கனவே இருந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.