கேக் தயாரிக்கும் எந்திரத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர்-ராதாபுரம் மெயின் ரோட்டில் ஒரு பேக்கரி அமைந்துள்ளது. இந்த பேக்கரி கடையின் உரிமையாளர் கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலும் செய்து வருகிறார். இவரிடம் முத்து செல்வன்(26) என்பவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். தினமும் முத்துச்செல்வன் பேக்கரியில் இருக்கும் குடோனில் தங்குவது வழக்கம். நேற்று முன்தினம் பேக்கரியில் கேக் தயாரிக்கும் பெரிய எந்திரத்தில் முத்து செல்வன் சடலமாக கிடந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் முத்து செல்வனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் முத்து செல்வன் கேக் எந்திரத்திற்குள் சென்று தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.