திருமண மண்டபத்தில் தூங்கிய சமையல் தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மதுராந்தக நல்லூர் அழகாத்த குல தெருவில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சமையல் தொழிலாளி ஆவார். இந்நிலையில் சக்திவேல் கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் தேசிய நெடுஞ்சாலை அருகே இருக்கும் திருமண மண்டபத்தில் சமையல் வேலை செய்வதற்காக சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சமையல் செய்துவிட்டு தூங்கிய சக்திவேலை அதிகாலை 4 மணிக்கு சக தொழிலாளர்கள் எழுப்ப முயன்றனர்.

ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. அப்போதுதான் சக்திவேல் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சக்திவேலின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் சக்திவேல் இறந்ததற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply