காதலனை கரம் பிடித்த 4 மாதத்தில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் சிவந்தி பிள்ளையார் கோவில் தெருவில் ரங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகள் ஹேமாவதி(20) கடந்த நாளும் மதங்களுக்கு முன்பு சிவ சுப்பிரமணியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இந்நிலையில் அடிக்கடி ஹேமாவதி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதனால் கோபமடைந்த சிவசுப்பிரமணியன் இதுகுறித்து ஹேமாவதியின் தாய் கண்ணம்மாளிடம் தெரிவித்தார்.

அவரும் தனது மகளை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து ஹேமாவதி நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஹேமாவதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply