நண்பரை காப்பாற்றிய கல்லூரி மாணவர்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சாத்தமங்கலம் அரண்மனைமேடு பகுதியில் பாலசுப்பிரமணியம்- பஞ்சவர்ணம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் சரவணன்(19) குமுளூர் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சரவணன் தனது நண்பர்களான ரியாஸ்(15), தருண்(16) பிரகதீஷ்(19), சுரேந்தர்(16) ஆகியோருடன் மங்கம்மாள்புரம் ஊராட்சி பகுதியில் இருக்கும் கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து ஆழமான பகுதிக்கு சென்றதால் ரியாஸ் சூழலில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதனை பார்த்த சரவணன் ரியாசை காப்பாற்றினார். பின்னர் சரவணன் எதிர்பாராதவிதமாக புதை மணலில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சரவணனின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.