காப்பகத்தில் பராமரிக்கப்பட்ட 3 மாத குழந்தை…. மூச்சுதிணறி உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் மாம்பழ சாலை பகுதியில் குழந்தைகள் காப்பகம் அமைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் கடலூர் குழந்தைகள் நலக்குழு மூலமாக ஸ்டாலின் என்ற மூன்று மாத குழந்தை காப்பகத்தில் சேர்த்து பராமரிக்கப்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் குழந்தையை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து குழந்தைகள் காப்பக திட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தோணி ஜெயராஜ் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.