பிறந்து 6 நாட்களில்…. திடீரென இறந்த பெண் குழந்தை…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிந்தகம்பள்ளி பகுதியில் ஜெயப்பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறை மாத கர்ப்பிணியான சித்ராவுக்கு கடந்த 17-ஆம் தேதி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து தாயும், குழந்தையும் பர்கூர் அரசு மருத்துவமனையிலேயே இருந்தனர். இந்நிலையில் பிறந்து 6 நாட்களே ஆன நிலையில் நேற்று முன்தினம் மூச்சு திணறல் ஏற்பட்டு திடீரென குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.