“புரோட்டா இல்லை”…. மாஸ்டரை கத்தியால் குத்திய நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குட்டம் தோப்பு விளை பகுதியில் இருக்கும் புரோட்டா கடையில் சுரேஷ் என்பவர் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடி சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் புரோட்டா கேட்டு கடைக்கு சென்றுள்ளார். அப்போது சுரேஷ் புரோட்டா காலியாகிவிட்டது என கூறினார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த பிரான்சிஸ் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து சுரேஷை குத்தியுள்ளார். இதனால் காயமடைந்த சுரேஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பிரான்சிஸை தீவிரமாக தேடி வருகின்றனர்.