வேலைக்கு சென்ற தொழிலாளி…. மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனம்பட்டி நடுத்தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கண்ணன் தனது வீட்டிற்கு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டிற்கு முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் கண்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வருவதற்குள் மோட்டார் சைக்கிள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதுகுறித்து கண்ணன் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.