காதலித்து ஏமாற்றிய வாலிபர்…. இளம்பெண் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள இருகையூர் கிராமத்தில் அழகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அஜித் 21 வயதுடைய இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். மேலும் அந்த இளம்பெண்ணை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.

இதனையடுத்து அஜித் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அஜித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.