ஹாரன் அடித்த வாலிபர்…. தாக்குதல் நடத்திய 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தேவமங்கலம் வ.உ.சி நகரில் சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருந்து வாங்குவதற்காக மோட்டார் சைக்கிள் சென்றுள்ளார். இந்நிலையில் சிலால் நான்கு ரோடு பகுதியில் முன்னால் சென்ற லாரியை முந்தி செல்வதற்காக சாலையின் குறுக்கே நின்றிருந்த மோட்டார் சைக்கிளை எடுக்க கோரி சந்தோஷ் ஹாரன் அடித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த வாலிபர்கள் சந்தோஷை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இது குறித்து சந்தோஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சுதாகர், சதீஷ்குமார், வேல்முருகன், விக்னேஸ்வரன் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.