அதிக லாபம் தருவதாக கூறி…. ஆடிட்டரிடம் ரூ.50 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த ஆடிட்டரான பவுன் குமார் என்பவர் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கடந்த 2019-ஆம் ஆண்டு எனக்கு சேலத்தைச் சேர்ந்த சங்கர் பாபு, திருப்பூரைச் சேர்ந்த கிருஷ்ண பிரகாஷ் ஆகியோர் அறிமுகமானார்கள். அவர்கள் திருச்சி நம்பர் 1 டோல்கேட் பகுதியில் வர்த்தக நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நிறுவனத்தில் முதலீடு செய்தால் 15 சதவீத வட்டி மூலம் அதிக லாபம் கிடைக்கும் என தெரிவித்தனர்.

இதனை நம்பி அவர்களிடம் பல்வேறு தவணைகளாக 50 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை முதலீடாக கொடுத்தேன். ஆனால் கூறியபடி அவர்கள் லாபத்தொகை தராமல் ஏமாற்றி விட்டனர். இதனால் கொடுத்த பணத்தை திரும்பி கேட்டபோது கொலை மிரட்டல் விடுகின்றனர். எனவே உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply