தகராறு செய்த தொழிலாளி …. கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூரில் மாதவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அய்யம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மாதவன் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் கோபத்தில் அய்யம்மாள் தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மாமியாரின் வீட்டிற்கு சென்ற மாதவன் வழக்கம்போல தகராறு செய்து அங்கேயே தூங்கிவிட்டார். இதனால் கோபமடைந்த அய்யம்மாள் கொதிக்கும் எண்ணெயை மாதவன் மீது ஊற்றியதாக தெரிகிறது. இதனால் படுகாயமடைந்த மாதவன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply