அழுகிய நிலையில் ஆடிட்டர் சடலம் மீட்பு…. சிக்கிய உருக்கமான கடிதம்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுசூரிபாளையம் பகுதியில் இருக்கும் தனியார் நூற்பாலையில் கோவையைச் சேர்ந்த வினோத் என்பவர் ஆடிட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வினோத்குமாரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது உடல் அழுகிய நிலையில் வினோத்குமார் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் வினோத்குமார் எழுதிய கடிதத்தை கைபற்றியுள்ளனர்.

அந்த கடிதத்தில் எனது அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களிடம் கடன் வாங்கினேன். அந்த கடனை உரிய நேரத்தில் செலுத்த இயலவில்லை. அம்மா, அப்பா, அண்ணா, அண்ணி என்னை மன்னித்து விடுங்கள். எனது மனைவி சுஜியை எதுவும் சொல்லாதீர்கள். கடனை எப்படியாவது அடைத்து விடலாம் என மூன்று மாதங்களாக போராடினேன். ஆனால் கடனை அடைக்க இயலவில்லை. இனிமேல் என்னால் வாழ முடியாது. எனது சாவுக்கு நானே காரணம் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.