அதிக வட்டி தருவதாக கூறி…. ரூ.3 கோடி வரை பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையத்தில் வசிக்கும் ஒருவர் அந்த பகுதியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் பல லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளார். இந்நிலையில் அந்த நிதி நிறுவனத்தினர் கூறியபடி அதிக வட்டி தொகை கொடுக்கவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், நிதி நிறுவனத்தைச் சேர்ந்த பங்குதாரர்கள் விஜயகுமார், குணசேகரன், தங்கராசு உள்ளிட்ட 10 பேர் 25-க்கும் மேற்பட்டவர்களிடம் மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் விஜயகுமார் உள்பட 10 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 3 கோடி வரை பண மோசடி நடந்திருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர்.