கத்தியால் குத்த முயன்ற மகன்கள்…. தாய் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆனைக்குழாய் தெருவில் சிவக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரகு(22), ராஜலிங்கம்(20) என்ற மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ரகுவும், ராஜலிங்கமும் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு தனது தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்தனர்.

சம்பவம் நடைபெற்ற அன்று பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்த ராணியை ரகுவும், ராஜலிங்கமும் கத்தியால் குத்த முயன்றதாக தெரிகிறது. உடனே அப்பகுதியில் இருப்பவர்கள் வந்ததும் கதியை தூக்கி எறிந்து விட்டு இருவரும் அங்கிருந்து சென்றனர். இதுகுறித்து ராணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ரகு, ராஜலிங்கம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.