பால் வாங்க சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சேசஞ்சாவடி பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவி உள்ளார். நேற்று காலை பால் வாங்குவதற்காக செல்லம்மாள் வீட்டை பூட்டுவிட்டு வெளியே சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு செல்லம்மாள் அதிர்ச்சிடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்த போது 2 பீரோக்களை உடைத்து மர்ம நபர்கள் 10 பவுன் தங்க நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செல்லம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.