கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பழைய பேருந்து நிலையத்தில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கேரளாவிற்கு கனிம பொருட்களை ஏற்றி சென்ற இரண்டு லாரிகளை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அளவுக்கு அதிகமாக கனிம பொருட்களை ஏற்றி சென்றது தெரியவந்தது.
இதனால் இரண்டு லாரி உரிமையாளர்களுக்கும் போலீசார் 1 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். அபராத தொகை கட்டிய பிறகு 2 லாரிகளும் விடுவிக்கப்பட்டது. மேலும் விதிமுறையை மீறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.