மருத்துவ கழிவுகள் கொட்டிய விவகாரம்…. தனியார் மருத்துவமனை மேலாளர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பெருமாள்புரம் ரெட்டியார்பட்டி பைபாஸ் சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், கழிவுகளை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டியது தெரியவந்தது. இதனால் மருத்துவமனையின் மேலாளர் மில்டன் என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மில்டன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.