பாழடைந்த வீட்டிற்கு தூக்கி சென்ற தொழிலாளி…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி சுற்றுப்புற கிராமத்தில் வசிக்கும் 6 வயதுடைய சிறுமி 1-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சிறுமியின் தந்தை தனியாக சென்றுவிட்டார். இதனால் சிறுமியின் தாய் தனது உறவினர்களுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கேரட் மூட்டை தூக்கும் தொழிலாளியான ரமேஷ் குமார் என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி பாழடைந்த வீட்டிற்கு சிறுமியை தூக்கி சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் ஊட்டி ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் ரமேஷ் குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.