கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் சுகவன மூர்த்தி மடம் பகுதியில் டிரைவரான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே ராஜேந்திரன் என்பவர் தின்பண்டங்கள் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஓசூரை சேர்ந்த கமல்ராஜ் என்பவர் தின்பண்டங்கள் வாங்குவதற்காக கடைக்கு வந்தபோது ஸ்கூட்டரை ரமேஷின் வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ரமேஷ் கேட்டபோது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இது தொடர்பாக இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் கமல்ராஜ், ராஜேந்திரன், ரமேஷ், அவரது மனைவி ரத்னா, மகன் அருண்குமார் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.