குடிபோதையில் ரகளை…. பொது இடத்தில் ஆபாசமாக பேசிய இருவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கரடிகுறி மற்றும் கே.பூசாரிபட்டி ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரண்டு பேர் பொது இடத்தில் வைத்து குடிபோதையில் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தனர். இதனால் போலீசார் இருவரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அந்த விசாரணையில் அவர்கள் கள்ளியூர் பகுதியில் வசிக்கும் திருப்பதி(27) மற்றும் ஜெயக்குமார்(33) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் திருப்பதி மற்றும் ஜெயக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Leave a Reply