மகனை கண்டித்த தாய்…. நண்பருடன் சேர்ந்து தாக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கரிஞ்சாங்கோடு ஆசாரிபிலாவிளை பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேரி மார்கிரட் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஷர்லின் ஜோஸ்(25) என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் ஷர்லின் ஜோஸ் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற அன்று நண்பருடன் மது போதையில் வீட்டிற்கு வந்த ஷர்லின் ஜோசை அவரது தாய் கண்டித்தார். இதனால் ஷர்லின் ஜோஸ் தனது நண்பருடன் சேர்ந்து தாயை சரமாரியாக தாக்கி கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதனால் காயமடைந்த மேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஷர்லின் ஜோஸ் மற்றும் அவரது நண்பர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply