மனநலம் பாதிக்கப்பட்டு குணமாகிய பெண்…. 5 1/2 ஆண்டுகளுக்கு பிறகு கணவரிடம் ஒப்படைப்பு…. போலீஸ் நடவடிக்கை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரோவர் ஆர்ச் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க பெண் சுற்றி திரிந்தார். கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெரம்பலூர் போலீசார் அந்த பெண்ணை மீட்டு ஒரு கருணை இல்லத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அந்த பெண் நலமாக இருக்கிறார்.

இந்நிலையில் அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அயன்பேரையூரில் வசிக்கும் துரை அரசனின் மனைவி ஜெயா என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் துரை அரசனை வரவழைத்து அவரது மனைவியை ஒப்படைத்தனர்.

Leave a Reply