கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்கள்…. தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறிப்பு…. போலீஸ் நடவடிக்கை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் சின்ன எலசகிரி காமராஜ் நகரில் ஷகிபுல் இஸ்லாம்(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஷகிபுல் பேடரப்பள்ளி ஆஞ்சநேயர் கோவில் அருகே நின்று கொண்டிருந்த போது திடீரென வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து ஷகிபுல் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிப்காட் பேடரப்பள்ளி பகுதியை சேர்ந்த விக்னேஷ்(20) மற்றும் சரவணன்(25) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply