விளையாடி கொண்டிருந்த சிறுமி…. வட மாநில தொழிலாளி செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பேட்டரப்பள்ளி பகுதியில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுனில் வர்மா என்பவர் தங்கி இருந்து கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை தனது அறைக்கு அழைத்து சென்று சுனில் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சுனில் வர்மாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply