முதல் மனைவி குறித்து கேட்ட புதுப்பெண்…. மிரட்டல் விடுத்த கணவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூர் கிராமத்தில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரங்கசாமி(29) டிராக்டர் டிரைவராக இருக்கிறார். இவருக்கும் இவரது முதல் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. கடந்த மே மாதம் 22-ஆம் தேதி ரங்கசாமி காமராசவல்லி கிராமத்தில் வசிக்கும் தமிழ்ச்செல்வி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

இதனையடுத்து தனது கணவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை அறிந்து அதிர்ச்சியடைந்த தமிழ்செல்வி அதுகுறித்து கேட்டுள்ளார். இதில் கோபமடைந்த ரங்கசாமி தமிழ்ச்செல்வியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழ்செல்வி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ரங்கசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply