திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேல பண்டாரபுரம் பேருந்து நிறுத்தம் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒருவர் போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் நடுரோட்டில் நின்று ரகளை செய்துள்ளார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே ஊரில் வசிக்கும் சுடலை பால்(28) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ரகளையில் ஈடுபட்ட சுடலைபாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.