மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள்…. பெண்ணிடம் தங்க சங்கிலி “அபேஸ்”…. போலீஸ் வலைவீச்சு….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தொழுதூர் கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இவர் மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலைக்கு சென்று விட்டு மஞ்சுளா வீட்டிற்கு வந்து கொண்சிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் மஞ்சுளாவின் கழுத்தில் இருந்த 1 1/2 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து மஞ்சுளா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply