நள்ளிரவில் சாலையில் சுற்றித்திரிந்த மாணவர்கள்…. பத்திரமாக மீட்ட போலீசார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுவன் அரசு பள்ளியில் 8- ஆம் வகுப்பு படித்து வருகிறான். அதே பள்ளியில் மணிகட்டி பொட்டல் பகுதியைச் சேர்ந்த மற்றொரு சிறுவனும் படித்து வருகிறான். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற இரண்டு சிறுவர்களும் மாலை நேரத்தில் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்களின் பெற்றோர் தனித்தனியாக கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மாணவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் இருளப்பபுரம் சாலையில் சுற்றித்திரிந்த 2 மாணவர்களையும் போலீசார் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது தாயார் திட்டியதால் ஒரு மாணவன் நான் இனிமேல் வீட்டிற்கு செல்ல மாட்டேன் என கூறியுள்ளார். இதனை கேட்ட மற்றொரு மாணவனும் அப்படி என்றால் வீட்டிற்கு செல்லாமல் வெளியே எங்காவது செல்வோம் என கூறி இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றி வந்தனர். பின்னர் மாணவர்களை போலீசார் எச்சரித்து அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

Leave a Reply