கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பசவனத் தொட்டி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயது உடைய ரக்ஷித் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்ததால் சுரேஷின் பழமையான ஓட்டு வீட்டின் சுவர்கள் நனைந்து போயிருந்தது.
நேற்று மாலை ரக்ஷித் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து குழந்தை மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்த குழந்தையை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் ரக்ஷித் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.