நகை, பணத்துடன் மாயமான புதுப்பெண்…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலத்தில் நடேசன்(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் விருதாச்சலம் பாலக்கரையில் இருக்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடேசனுக்கும் பழைய பாளையத்தை சேர்ந்த ஐஸ்வர்யா(24) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. நேற்று முன்தினம் ஐஸ்வர்யா திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் நடேசனும், அவரது குடும்பத்தினரும் ஐஸ்வர்யாவே பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இதுகுறித்து நடேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஐஸ்வர்யாவை தேடி வந்தனர். இந்நிலையில் நடேசன் வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது ஐஸ்வர்யா எழுதிய கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் நடேசனுடன் வாழ எனக்கு விருப்பமில்லை என ஐஸ்வர்யா எழுதியிருந்தார். மேலும் ஐஸ்வர்யா வீட்டில் இருந்த 1 பவுன் நகை, 10 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வெளியேறியது தெரியவந்தது. திருமணமான மூன்று மாதத்தில் புதுப்பெண் நகை பணத்துடன் காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply