மீன் பிடிக்க சென்ற முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாலியாம்விளை பகுதியில் கூலி வேலை பார்க்கும் ரைமண்ட்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெங்குளம்கரை பகுதியில் இருக்கும் வயலில் தேங்கி நிற்கும் தண்ணீரில் வழக்கமாக மீன் பிடிப்பார். நேற்று மாலை நேரத்திலும் மீன் பிடிப்பதற்காக சென்ற ரைமண்ட் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கினார்.

இதனை பார்த்த சிலர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மயங்கிய நிலையில் இருந்த ரைமண்டை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்த விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply