தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தீர்த்தகிரி நகரில் சக்தி மணிகண்டன்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகன விற்பனை ஷோரூமில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தேவி என்ற மனைவியும், 4 வயதில் ஆண் குழந்தையும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் முன்னதாக 6 மணிக்கே சக்தி வீட்டிற்கு வந்து விட்டார். இதுகுறித்து தேவி தனது கணவரிடம் கேட்டபோது, என்னை தொந்தரவு செய்யாதே என கூறிவிட்டு சக்தி தூங்க சென்றுள்ளார்.
இதனையடுத்து நீண்ட நேரமாக சக்தி எழுந்திருக்காததால் தேவி தனது கணவரை சாப்பிட அழைக்க சென்றுள்ளார். அப்போது பேச்சு, மூச்சு இல்லாமல் சக்தி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த தேவி உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் சக்தி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.