வியாபாரத்தை முடித்து தூங்கிய தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திக்கணங்கோடு செம்பிலாவிளை பகுதியில் கூலி வேலை பார்க்கும் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரதிஷ் என்பவரது கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் திருவிழா நேரங்களில் ரதீஷ் இனிப்பு பலகாரங்கள் தயார் செய்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இருவரும் திங்கள் சந்தை பேரூராட்சி அலுவலகம் அருகே தற்காலிக கடை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர்.

நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்து கணேசன் கடையில் ஒரு பகுதியில் தூங்கி கொண்டிருந்தார். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதனை பார்த்த சக வியாபாரிகள் கணேசனை எழுப்ப முயற்சி செய்தனர். அப்போது கணேசன் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணேசனின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply