நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆரியகவுண்டன் பட்டியில் சங்கரலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தரும் கரூரில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நண்பர்களுடன் கல்லூரி அருகே இருக்கும் தோட்டத்து கிணற்றுக்கு தருண் குளிப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது கிணற்றின் மேல் பகுதியில் நின்ற தருண் எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தருணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.