வீட்டிற்கு சென்ற பெண்…. ஓடும் பேருந்தில் தங்க நகை அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வள்ளியனூர் பகுதியில் பழனியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலத்தில் இருக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை வேலை முடிந்து பழனியம்மாள் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்தில் ஏறியுள்ளார். இந்நிலையில் அந்த பேருந்து சூரமங்கலம் சென்று கொண்டிருந்த போது பழனியம்மாளின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலி காணாமல் போனது.

இதனால் அதிர்ச்சியடைந்த பழனியம்மாள் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஓடும் பேருந்தில் பெண்ணிடமிருந்து தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.