தொலைபேசியில் வந்த அழைப்பு…. மர்ம நபர்களின் கொலை மிரட்டல்….. போலீஸ் வலைவீச்சு….!!

பா.ஜ.க நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பஸ்தி பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பா.ஜ.க.வில் தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மர்ம நபர்கள் தொலைபேசி மூலம் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *