“சொந்த ஊருக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர்” அங்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அடுத்த வடக்கு காருகுறிச்சியில் இசக்கி முத்து – லதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு மருதுபாண்டி என்ற மகனும், இந்துமதி என்ற மகளும் உள்ளனர். இதில் இசக்கிமுத்து நெல்லை மாநகர போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் நெல்லை டவுன் காவலர் குடியிருப்பு தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இதில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இசக்கிமுத்து மன உளைச்சலில் இருந்துள்ளார்.

எனவே தனது சொந்த ஊரான வடக்கு காருகுறிச்சிக்கு சென்று வீட்டின் பின்புறம் வைத்து விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த வீரவநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இசக்கிமுத்துவின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *