பழனியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்ஐ மீது தாக்குதல்…!!

பழனியில் பணியில் இருந்த காவல் ஆய்வாளரை போதையில் தாக்கிய கேரள மாநில போலீசாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததையடுத்து திண்டுக்கல் மாவட்டம் பழனி பாதவிநாயகர் கோயிலில்  சப்-இன்ஸ்பெக்டர் இளவரசு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது ஐந்து பேர் கொண்ட  ஒரு கும்பல் மது போதையில் மலைக்கோயில் செல்ல முயற்சித்தபோது அவர்களை தடுக்க முயன்ற இளவரசை சரமாரியாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது .

இதில்  காயம் அடைந்த அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடித்து விசாரித்ததில்  அவர்களுள் ஒருவர் கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த காவலர் என்பது தெரியவந்துள்ளது.மேலும்  அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.