கர்ப்பமான கல்லூரி மாணவி…. காதலன் போக்சோ சட்டத்தில் கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள உச்சிமேடு பகுதியில் பெயிண்டரான முத்தமிழன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 17 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். இந்நிலையில் சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முத்தமிழன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது கல்லூரி மாணவி 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

கடந்த மாதம் 10- ஆம் தேதி முத்தமிழன் மாணவியை தென்னம்பாக்கம் அழகர் கோவிலுக்கு அழைத்து சென்று திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து முத்தமிழன் மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போதுதான் அவருக்கு 17 வயது தான் ஆவது டாக்டர்களுக்கு தெரியவந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முத்தமிழனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply