இனிமேல் உண்மை தெரிஞ்சிடும்… சரணடைந்த இருவர்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் கொலை வழக்கில் சரணடைந்த இரண்டு பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ரங்காபுரம் கிராமத்தில் வரதராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ஆவார். இந்நிலையில் வரதராஜனை கடந்த மே மாதம் 6-ஆம் தேதியன்று மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து மர்மநபர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.

இதனை அடுத்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பட்டாபிராமபுரம் கிராமத்தில் வசிக்கும் பார்த்திபன் மற்றும் லட்சுமணன் ஆகிய இருவரும் சென்னை ஆலந்தூர் கோர்ட்டில் ஜுன் 3 – ஆம் தேதியன்று தாமாகவே வந்து சரணடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் இருவரையும் காவலில் எடுத்து கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *