துப்பாக்கியுடன் பீட்ஸா கொண்டு வந்த இளைஞன்… சுட முயன்றதால் சுட்டுப்பிடித்த போலீசார்… அதிர்ச்சி வீடியோ!

அமெரிக்காவில் போலீசாரைத் துப்பாக்கியால் சுட முயன்ற இளைஞனை போலீசார் சுட்டுப்பிடித்த வீடியோ வெளியாகியிருக்கிறது.

அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜேவியர் டோரஸ் ( javier torres)என்ற இளைஞன். 26 வயதான இவன் பீட்ஸா டெலிவரி கொடுக்கும் வேலை செய்து வந்துள்ளான். கடந்த சில நாட்களுக்கு முன் பீட்ஸா வழங்க  ஒரு வீட்டுக்குச் சென்றபோது, அவன் இடுப்பில் கைத்துப்பாக்கி வைத்திருந்தான்.

Image result for Raleigh police shot and injured a 26 year old man Tuesday night. Police video shows man had a gun and would not drop the weapon.

இதனை பார்த்த வீட்டின் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து உடனே நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரைப் பார்த்ததும் அவன் ஓட்டம் பிடித்தான். அவனை நிற்கச்சொல்லியும், துப்பாக்கியை கீழே போட்டுவிடும்படியும் போலீசார் பலமுறை எச்சரித்தனர். ஆனால் அவன் கேட்கவில்லை.

Image result for Raleigh Police release footage of officer-involved shooting of man running with pizza box

ஒரு கட்டத்தில் அவன் எதிர்பாராத விதமாக நிற்காமல் போலீசாரை நோக்கி துப்பாக்கியுடன் ஓடி வந்துள்ளான். இதனால் தங்களை பாதுகாத்துக்கொள்ள போலீசார் டோரசை  சுட்டதில் அவன் படுகாயமடைந்தான். அதைத்தொடர்ந்து போலீசார் அவனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.