மருந்துக்கடை வைக்கனும்… பணம் கொடுக்க மறுத்த தந்தை… ஆத்திரத்தில் மகன் செய்த செயல்..!!

பேராம்பட்டு பகுதியில் தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், பேராம்பட்டு பகுதியில் வசித்து வந்தவர் பாலகிருஷ்ணன். இவர் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் திட்ட இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார்.. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை பாலகிருஷ்ணன் வீட்டில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்ததகவலின் பெயரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்..

அப்போது வீடு முழுக்க மிளகாய் பொடியை தண்ணீரில் கரைத்து பல்வேறு இடங்களில் தெளித்து விட்டு, பாலகிருஷ்ணனைத் தலை மற்றும் கை பகுதிகளில் பலமாக அரிவாளால் வெட்டிகொலை செய்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து போலீசார் பாலகிருஷ்ணனின் சடலத்தை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், அவரின்  மகன் சேதுராமன் தான் தந்தையைக் கொலை செய்திருக்கிறார் என்பது தெரியவந்தது.

அதாவது, பாலகிருஷ்ணனின் மகன் சேதுராமன் சில தினங்களாக மருந்துக்கடை வைக்க பணம் கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாகவும், தர மறுத்த காரணத்தால் தந்தை பாலகிருஷ்ணனைத் தலையில் இரும்பு கம்பியால் கொடூரமாக அடித்துக் கொலை செய்து விட்டு வீடு போலீசாரிடம் நாடகமாடியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் சேது ராமனை கைது செய்து, இந்தகொலையில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *