முத்தம் கொடுக்க முயன்ற நண்பர்…. மறுப்பு தெரிவித்த பள்ளி மாணவி… பின் அரங்கேறிய சம்பவம்..!!

மத்திய பிரதேசத்தில் முத்தம் கொடுக்க மறுத்ததால் பள்ளி மாணவியை கீழே தள்ளி கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர். 

மத்திய பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் பகுதியைச் சேர்ந்த பிங்கி என்ற பள்ளி மாணவி (18 வயது) 12-ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.இந்நிலையில் இவர் கடந்த வியாழக்கிழமை அன்று தனது ஆண் நண்பருடன் பிஜாபுரி  கிராமத்தில் இருக்கும்  வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். வனப்பகுதியில் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என சொல்லப்படுகிறது.

Image result for Police have arrested a friend who killed a schoolgirl for refusing to kiss in Madhya Pradesh.

இதையடுத்து பதறிப்போன அவரது குடும்பத்தினர்  பல இடங்களில் தேடி விட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். காவல்துறையினர் மாணவியை தீவிரமாக தேடி வந்த நிலையில் வனப்பகுதியில் அவர் சடலமாக கிடந்தார். மாணவியின் தலையில் பின்புறம் காயமடைந்த நிலையில் உடல் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து போலீசார் தொடங்கிய விசாரணையில் ஆண் நண்பரான ராமன்சிங் சயானை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

Related image

விசாரணையில் பிங்கியை  கொலை செய்தது தான் என ராமன் சிங் ஒப்புக் கொண்டார். அவர் கூறும்போது, வனப்பகுதியில் நான் முத்தம் கொடுக்க முயன்றேன். ஆனால் அவள் அதற்க்கு மறுப்பு தெரிவித்ததால் அவரை பின்நோக்கி தள்ளி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதில் கீழே விழுந்த பிங்கியின்  தலை பகுதி கல்லில் பட்டு பலத்த காயமடைந்து  உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர்  போலீசார் ராமன்சிங் சயானை கைது செய்துள்ளனர்.