மிரட்டும் போலீஸ் கதாபாத்திரத்தில்.. ரொமான்டிக் ஹீரோ அதர்வா..

முதல் முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்  நடிகர் அதர்வா இந்த கதாபாத்திரத்துக்காக கடினமாக உழைத்து உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .

பொதுவாக தமிழ் சினிமா கதாநாயகர்கள்  பல்வேறு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு  கிடைத்திருந்தாலும் காவல்துறை  கதாபாத்திரத்தத்தில்  நடிப்பதற்கு பெரிதும் ஆர்வம் கொள்வார்கள்  ,ஏனென்றால் அதில்  நடிப்பது  அவ்வளவு எளிதான காரியம் அல்ல ஏனென்றால் அதற்கென்று பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரமாக நாம் மாற வேண்டும்.

ஆகையால் தமிழ் சினிமாவின் அனைத்து கதாநாயகர்களும் விரும்பும் கதாபாத்திரமாக காவல்துறை கதாபாத்திரம்  உள்ளது மற்ற கதாபாத்திரத்தை போல் இதில் அவ்வளவு எளிமையாக நடித்துவிட முடியாது உடல் தோற்றம் முதல் நடை உடை பாவனை என அனைத்திலும் முற்றிலுமாக காவல்துறை போல் மாற வேண்டும் உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் காக்க காக்க என்னும் திரைப்படம் ஆனது  தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு  வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது

இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா அவர்கள் காவல்துறை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த கதாபாத்திரத்திற்காக உடலளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும் நடை உடை பாவனைகளிலும் முற்றிலும் காவல்துறை கதாபாத்திரமாக  மாற வேண்டும் என்பதற்காக அப்போதைய காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபு என்பவரிடம்  பயிற்சி பெற்று அவரிடம் நிறைய ஆலோசனைகளை பெற்று அவர் அந்தக் கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்தார் என்ற தகவல்கள் வெளியாகின .

இதனை அடுத்து பல்வேறு கதாபாத்திரங்கள் கதாநாயகர்கள் காவல்துறை கதாபாத்திரத்தில் நடிக்கும் பொழுது  தங்களது தனித் திறமையை வெளிப்படுத்துவர் இதனை அடுத்து நடிகர் அதர்வா அவர்கள் தற்போது காவல்துறை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அதர்வா என்றாலே காதல் ரீதியான திரைப்படம் ரொமான்டிக் ஹீரோ என்ற பெயரை பெற்றிருப்பவர் இந்நிலையில் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கொண்ட படத்தில் அதர்வா காவல்துறை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இதனையடுத்து இந்த கதாபாத்திரத்திற்காக கடின உழைப்பு செய்து தனது கடின உழைப்பினை செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார் இவர் நடித்துக் கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தின் பெயர் 100  இந்த திரைப்படத்திற்கான  படப்பிடிப்பு தற்பொழுது  முடிந்த நிலையில் திரையில் வெளியிடுவதற்கு தயார் நிலையில் உள்ளது இந்த படத்தின் போஸ்டர்  டீஸர் ஆனது சமீபத்தில் வெளியிடப்பட்டது.