“இவ்வளவு பணமா..!” இந்த பணத்தை எப்படி மாற்றுவது..? மாட்டிக்கொண்ட கொள்ளையர்கள்..!!

லண்டனில் தற்போது வரை இல்லாத அளவிற்கு 5 மில்லியன் பவுண்ட் பணம் பதுக்கிவைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

லண்டனில் உள்ள Fulham ல் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது மில்லியன் கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் Sergejs Auzins, Serwan Ahmadi மற்றும் Shamsutdinov’s ஆகிய மூவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர்களிடமிருந்து மொத்தமாக, ஐந்து மில்லியன் பவுண்ட் பணம் கைப்பற்றபட்டுள்ளது.  அதாவது லண்டனில் தற்போது வரை இவ்வளவு அதிக தொகையை கைப்பற்றப்பட்டது இதுவே முதல் முறையாகும். இதனைத்தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று மூவருக்கும் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் பணத்தை அழுக்கு மூட்டைகள், பைகள் மற்றும் படுக்கைக்கு அடியில் மறைத்து வைத்திருந்துள்ளனர். தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் பணத்தை எவ்வாறு மாற்றுவது என்று அவர்கள் தவித்துக் கொண்டிருந்துள்ளனர். அந்த சமயத்தில் தான் அவர்களை நீண்ட நாட்களாக தேடி வந்த காவல்துறையினரிடம், சிக்கிக் கொண்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பணம் கலவரம், குற்றச்செயல்களை சமாளிக்க மெட் காவல்துறையினருக்கும்  ஹோம் ஆபீஸ் செயல்பாடுகளுக்கும் நிதியாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *